×

மக்கள் போராட்டத்துக்கு முதல் வெற்றி மகிந்த ராஜபக்சேவின் பிரதமர் பதவி பறிப்பு?: பணிந்தார் அதிபர் கோத்தபய

கொழும்பு: இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தினால், தனது சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க செய்ய அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் அளித்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவால், அத்தியாவசிய உணவுப்பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு கூட தேவையான அந்நியச் செலாவணி இல்லாமல் இந்நாட்டு அரசு தவிக்கிறது. இதன் விளைவாக எரிபொருள் பற்றாக்குறை, பணமதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வெளிநாட்டு கடன் என நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  இதற்கு காரணமான ராஜபக்சே குடும்பத்தினர் அதிபர், பிரதமர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து விலகும்படி  வலியுறுத்தி, கடந்த 9ம் தேதி முதல் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜபக்சே குடும்பத்தினர் ஏப்ரல் 30ம் தேதிக்குள் பதவி விலகாவிட்டால் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.  

இதற்கிடையே, அதிபர் கோத்தபய கடந்த சில தினங்களுக்கு முன் அனைத்து கட்சி தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ஏப்ரல் 29ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், அதிபர் கோத்தபய தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில், இலங்கை மக்கள் கட்சி கூட்டணியில் இதற்கு முன் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின், தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்ரிபால சிறிசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு பேட்டி அளித்த சிறிசேனா, `நாட்டின் மிக மோசமான பொருளாதார சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு, முற்றுப்புள்ளி வைக்க அமைக்கப்படும் இடைக்கால அரசில், தனது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சேவுக்கு பதிலாக புதிய பிரதமரை நியமிக்க அதிபதி கோத்தபய ஒப்புக்கொண்டார். புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை தெரிவு செய்வதற்கு தேசிய குழு அமைக்கவும் அவர் ஒப்புதல் அளித்தார்,’ என தெரிவித்தார்.



Tags : Mahinda Rajapaksa ,President ,Gotabhaya Panindar , The first victory for the people's struggle Mahinda Rajapaksa's PM ousted? President Gotabhaya
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...